மன அழுத்தம் காரணமாக டிக்டாக் சூர்யா தற்கொலை முயற்சி! மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Jayachandiran

திருப்பூர் மாவட்டம் ஐயம்பாளையம் அருகேயுள்ள சபரிநகர் பகுதியில் வசிக்கும் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் பல சேட்டையுன் வலம் வந்தவர். பின்னர் ரவுடி பேபி சூர்யா என்ற அடைமொழி பெயரில் நெட்டிசன்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில் சூர்யா சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் கொரோனா தீவிரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் பலரை இந்திய அரசு தனி விமானங்களின் மூலம் மக்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது. இதில் சூர்யாவும் சிறப்பு விமானத்தின் மூலம் கோவை விமான நிலையத்தில் வந்தபிறகு தனது சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றார்.

சூர்யா வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் கொரோனா அச்சத்தில் அக்கம் பக்கத்து மக்கள் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் சூர்யாவை தேடி விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸில் அவரை அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது, தனக்கு கோவை விமான நிலையத்திலேயே கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதாக சூர்யா வாதிட்டார்.இதையடுத்து ஆம்புலன்ஸில் வரமாட்டேன் இருசக்கர வாகனத்தில் வருவதாக தெரிவித்ததோடு, தனக்கு ஏசி வசதிகொண்ட தனி அறை வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட தனியார் செய்தியாளைரை விமர்சித்து கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால், நிருபர் அளித்த புகாரின் படி வீரபாண்டி போலீசார் ரவுடி பேபி சூர்யா மீது ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நடவடிக்கைகளால் மனழுத்தம் ஏற்பட்டு வேதனை அடைந்த சூர்யா, இன்று காலை தனது வீட்டில் டிக்டாக் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.