காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்!!மண்ணை விட்டு மறைந்த பாடகர்..சோகத்தில் ரசிகர்கள்!!

Photo of author

By Parthipan K

காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்!!மண்ணை விட்டு மறைந்த பாடகர்..சோகத்தில் ரசிகர்கள்!!

Parthipan K

Time and time, where are you taking me?

காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்!!மண்ணை விட்டு மறைந்த பாடகர்..சோகத்தில் ரசிகர்கள்!!

பிரபல பின்னணி பாடகர் பாம்பா பாக்யா இவருடைய வயது 49.தமிழ் திரைவுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.பல இன்னல்களை தாண்டி  ஒருவரை கண்டரியப்பட்டவர் தான் பாம்பா பாக்யா.பாடகரான இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார்.

இவரின் பாடல் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது.ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய சிம்ட்டன்காரன் பாடல் மூலம் தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் இவரின் பாடல் இடம் பெற்று இருக்கும்.அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் எந்திரன் திரைப்படத்திற்காக அவர் பாடிய புள்ளினங்காள் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அதன் பின்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இடம்பெற்ற காலமே காலமே என்ற பாடலை  பாடியவர் இவரின்  குரல் தான்.மேலும் தற்போது வெளியான பொன்னியின் செல்வன்  படத்தில் இடம் பெரும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பாடி இருந்தார் பாம்பா பாக்யா.இவரின் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

இந்நிலையில்  இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மருத்துவர்கள் அவருக்கு தீவிர  சிகிச்சை அளித்து வந்தார்கள்.திடிரென இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது இதனால்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது மறைவிற்கு திரைவுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.