அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!!

Photo of author

By CineDesk

அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!!

CineDesk

Time change of government offices!! State government sensational information!!

அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!!

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதன் காரணத்தால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் உள்ளேயே இருந்து வந்தனர்.

எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது. இதன் காரணமாக மக்களின் மின் தேவையும் அதிகரித்தது.

எனவே, இந்த மின் தேவையை குறைப்பதற்காக அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேர மாற்றம் செய்யப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்தது.

அதாவது வெயிலின் தாக்கம் தீவிரமடைவதற்கு முன்பு பணியாளர்கள் வேலையை முடித்துக் கொள்ளும் விதமாக தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை அலுவலகங்கள் அனைத்தும் செயல்பட்டு வந்தது.

இந்த நடைமுறை இன்று வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்றுடன் இந்த நேர மாற்றம் முடிவடைய இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து மீண்டும் பழைய நேரப்படி காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய நேர மாற்றமானது வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஊழியர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றி விட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வெயிலின் தாக்கம் படி படியாக குறையும் தருவாயில் உள்ளதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.