கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Parthipan K

Tipper truck collided head-on in Coimbatore district! There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி  கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.

இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை விபத்தில் மன்னுடன் வந்த டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த ஓட்டுனர்கள் மோகனாதன் மற்றும்  செந்தில்குமார் ஆகியோர்  படுகாயம் அடைந்தனர். மேலும் ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் லாரி ஓட்டுனரையும்  மற்றும் கிளீனரையும்  மீட்டு அரசு   மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இரண்டு  லாரிகளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு லாரியானது ரோட்டில் கவிழ்ந்தது அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கிணத்தடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.