Heart Attack: ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தினம் இதை கடைபிடியுங்கள்
கொலஸ்ட்ரால் உடலின் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற ஒரு பொருள். அதில் இரண்டு வகைகள் உள்ளன.
அவைகளில் 1.நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம்.
மற்றொன்று 2.கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும்.
உடலுக்கு தேவையான ஆரோக்கியமான செல்களை உருவாக்க மேலே குறிப்பிட்ட நல்ல கொலஸ்ட்ரால் தேவை, ஆனால் சில சமயங்களில் நம்முடைய மோசமான உணவுப் பழக்க வழக்கத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
இதனால் மாரடைப்பு உட்பட பல வகையான இதய நோய்கள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இவ்வாறு உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் இருக்க கீழ்கண்ட சில எளிய விஷயங்களை பழக்கமாக்கிக் கொண்டாலே போதும். இதய நோயான ஹார்ட் அட்டாக் உள்ளிட்டவைகளிடமிருந்து சுலபமாக தப்பிக்கலாம்.
1. காலை நடைப்பயிற்சியை பழக்கமாக்குங்கள்
முதலில் காலையில் நடக்கும் நடைப்பயிற்சியை உங்கள் அன்றாட பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலமாக ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறையும்.
2. மன அழுத்தம், டென்ஷன் கூடாது
நம்மிடையே இருக்கும் டென்ஷன், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக டென்ஷன் எடுத்துக் கொள்ளக் கூடாது. மன அழுத்தத்தைக் குறைக்க, உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாரத்திற்கு ஒரு முறையாவது மனம் விட்டு பேச சிறிது நேரம் செலவிடவும். இது தவிர, உங்களுக்கு பிடித்த மகிழ்ச்சியைத் தரும் வேலையில் ஈடுபடுங்கள். இசையில் ஆர்வம் என்றால் மனதிற்கு இதமான இசையை தினமும் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
3. உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள்
உங்களுடைய அன்றாட உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் . உண்மையில், பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலின் செல்களை இறக்காமல் பாதுகாக்கின்றன, இது நீரிழிவு மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
4. உணவில் நட்ஸ்
அன்றாடம் நட்ஸ் சாப்பிடுவதன் மூலமும் இதயத்தைப் பாதுகாக்கலாம். உண்மையில், நட்ஸ் வகை பருப்புகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலிலிருந்து தேவையில்லாத கெட்ட கொழுப்பை அகற்ற பெரிதும் உதவுகிறது.
5. தினமும் நன்றாக தூங்குங்கள்
இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உடலுக்கு நல்ல தூக்கமும் அவசியம். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாள்தோறும் இரவு 10 மணிக்குப் பிறகு தூங்க முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் தூங்கும் நேரமும் உடலுக்கு மிகவும் முக்கியமானது.