உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்!

0
94

உங்கள் குழந்தை புத்திசாலியாக இருக்க வேண்டுமா? தினந்தோறும் இதை செய்தாலே போதும்!

நம் முன்னோர்கள் பல செயல்களை அறிவியல் பூர்வமாக செய்துள்ளனர். அந்த வகையில் சிலவற்றை நாம் தற்போது வரை பின்பற்றி தான் வருகிறோம். வீட்டின் வெளியே சாணி கரைத்து மஞ்சள் தெளிப்பதால் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவதாக கூறுவர். ஆனால் நமக்கு காலப்போக்கில் தான் தெரியும், அது ஒரு கிருமி நாசினி என்று. இதுபோல் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது. அவ்வாறான அர்த்தங்கள் கோவில்களில் சிற்பங்கள் மூலம் கூறி இருப்பார்.

அதனை வைத்து நாம் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் நாம் கோவிலுக்கு சென்றாள் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவது உண்டு. யாருக்கெல்லாம் தெரியும் இந்த எளிய உடற்பயிற்சியினால் மூளையின் உள்ள நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது என்று? ஆமாம் இப்பயிற்சி தினமும் 5 நிமிடம் செய்தாலே போதும். நம் அன்றாட வாழ்க்கையில் நம்ப முடியாத வேகத்தக்க மாற்றங்களை காணலாம்.

இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து இது குறித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது மந்தமான மனநிலை உள்ள குழந்தைகளின் மூளையின் செயல் திறனை அதிகரிக்க அவர்களின் காது நுனிகளில் தொடுதல் பயிற்சி மூலம் மாற்றத்தை காணலாம் என தெரிவித்துள்ளனர். ஏனென்றால் காது ,நுனி தொடுவதன் மூலம் செல்களின் வளர்ச்சி தூண்டப்படும்.

அதனால் மந்த நிலை விட்டு நினைவாற்றல் அதிகரிக்கும். தினந்தோறும் உங்கள் குழந்தைகளை ஐந்து நிமிடம் இதனை செய்ய சொல்லும் பொழுது நினைவாற்றல் அதிகரிப்பதோடு நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும்.