திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!
தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர்.
இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில் ஏராளமான காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டது. எனவே, போலீசார்கள் அடுத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரத்தை தடுக்க முயற்சி செய்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு, காவல் துறையினர் எந்நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த கலவரத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் சுமார் முப்பது பேருந்துகளின் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, வேலூரில் இருந்து திருப்பதி வரும் பேருந்துகளும், அதேப்போல திருப்பதியில் இருந்து வேலூருக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பதி சென்று இருக்கக்கூடிய பக்தர்களும், திருப்பதிக்கு செல்ல விரும்பும் பக்தர்களும் பேருந்துகள் வசதிகள் இல்லாததால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பக்தர்களின் நலனுக்காக விரைவில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவை எடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று மாநில அரசு முயற்சிகள் செய்து வருகிறது.