அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

Photo of author

By Jayachandiran

அழகான குடும்பம் இருந்தும் நிம்மதி இல்லாததால் கணவன் எடுத்த விபரீத முடிவு! தொழில் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?

நீண்ட நாட்களாக மன அழுத்தம் காரணமாக நிம்மதி இல்லாமல் இருந்த பிரபல திருப்பூர் பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளரின் மருமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சூரிய பிரகாஷ் பனியன் கம்பெனியை நடத்தி வந்தார். இவருக்கும் மற்றொரு பனியன் கம்பெனி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி என்பவரது மகளுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகியது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சூரியபிரகாஷ் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர் நேற்று பெங்களூரு செல்வதாக தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு கோவைக்கு வந்துள்ளார்.

கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடன்சியில் ஒரு அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு தங்கியிருந்த அறையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையில் முதற்கட்ட விசாரணையில் தொழில் நஷ்டம் காரணமாக சூர்யபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்றும் அப்பகுதி பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.