தேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!

0
88

தேனி காட்டுப்பகுதியில் நடந்த திடீர் தீவிபத்து! மூன்று குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்த கோர சம்பவம்!

காட்டுக்குள் நடைபயணமாக சென்றபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள அரலியூத்து வனத்தில் காட்டுத்தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. கொரோனோ பாதுகாப்பிற்காக தரைவழிப் போக்குவரத்து அனைத்தும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், கேரளா வனப் பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் காட்டு வழியாக வந்த நபர்கள் தீயில் மாட்டிக் கொண்டனர்.

காற்று வேகமாக வீசியதால் காட்டுத் தீ சுழன்று அடித்ததால் அதிலிருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளனர். ஆபத்தில் மாட்டிக் கொண்டவர்களில் 3 குழந்தைகள் உட்பட மொத்தமாக 8 பேர் தீயில் கருகி பலியாகினர். வீட்டில் இருந்து வெளியே போனால்தான் கொரோனா பாதிப்பு என்றால், காட்டுவழி சென்ற அப்பாவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்கள் கேரளாவில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் என்று தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பினால் மாநில எல்லை முடக்கம் மற்றும் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்மூலம் காட்டுவழியாக போடிநாயக்கனூர் சென்றபோது இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. தீயில் மாட்டிக் கொண்டவர்களை மீட்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேர் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
Jayachandiran