தித்திக்கும் அவல் பாயசம் – இப்படி செய்தால் சுவை கூடும்!! மறக்காம இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!
நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் அவல் பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*அவல் – 1 கப்
*பால் – 2 கப்
*ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
*வெல்லம் – 1/2 கப்
*நெய் – தேவையான அளவு
*முந்திரி பருப்பு – 10
*தூள் உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:-
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்க்கவும்.அவை சூடேறியதும் அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.தேவைப்பட்டால் உலர் திராட்சை சேர்த்து கொள்ளலாம்.வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.
அதே கடாயில் 1 கப் அவல் சேர்த்து வறுத்து எடுக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.அதன் பின் காய்ச்சி ஆறவைத்துள்ள 2 கப் பாலை அவலுடன் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு கடாயில் வெல்லம் 1/2 கப் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அவல் + பால் நன்கு வெந்தவுடன் அதில் தயார் செய்து வைத்துள்ள வெல்லக் கரைசலை சேர்க்கவும்.இதை ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
பிறகு வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.அதோடு வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து கிண்டி விடவும்.பிறகு அடுப்பை அணைக்கவும்.