உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று கோர தாண்டவம் ஆடிவருகிறது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை ஏற்று பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
இதனை அடுத்து மார்ச் 22ஆம் தேதி முதல் இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை பரிசோதனை செய்து வீட்டில் தனிமை படுத்திப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையில் துபாயில் இருந்து சென்னை வந்த 71 வயது முதியவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்து தற்போது அவர் கொரோனாவால் தான் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த 61 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நபர் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை வந்த இவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வரை தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக இருந்தது தற்போது இந்த இரண்டு உயிரிழப்புகள் 5ஆக உயர்ந்துள்ளது.