தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் குறித்து அரசு அறிவிப்பு?

Photo of author

By Anand

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம் எவ்வளவு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் தொடர்ந்த இந்த பொதுநல வழக்கு குறித்த விசாரணை விரைவில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்த வண்ணமேயுள்ளது.

அதாவது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு கட்டணம் மிக அதிகமாக வசூலிப்பதாகவும்,இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இதனையடுத்து விரைவில் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்படும் கொரோனாவுக்கு சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் தற்போது இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு  கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் தனியார் மருத்துமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 நிர்ணயம் தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணமாகவும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் இந்த கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9,600 வசூலிக்கவும் இந்த அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐ.எம்.ஏ நிர்ணயம் செய்துள்ள இந்த தொகை மிகவும் அதிகமாக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் விமர்சன கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.