இன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வருகின்ற மற்றும் 6ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வருகின்ற ஏழாம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோல் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிகளும் வருகின்ற ஏழாம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களின் ஊரில் இடங்களில் வெப்ப அலை வீச கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘கல்லக் கடல்’ எனும் நிகழ்வு இன்றும் நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி இன்காயிஸ் (INCOIS – இந்திய கடல்சார் தகவல் மையம்) அறிவுறுத்தியுள்ளது.