வீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!

0
136

பல்வேறு நாடுகளில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க பாரதப் பிரதமர் மோடி இன்று ஒருநாள்(22/03/2020) பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு இருக்க அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று மாநில அரசுகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல ஊர்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த மக்கள் ஊரடங்கில் சாலை ஓரங்களில் வசித்துவரும் வீடில்லாத மக்கள் என்ன செய்கிறார்கள் என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்து வந்தது. இதனைப் போக்க சென்னை மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது.

சாலை ஓரங்களில் வசித்து வரும் வீடில்லாத மக்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடங்கள் மற்றும் காப்பகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 51 காப்பகங்கள் அமைக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சென்னை மாநகராட்சியின் இந்த செயலை பார்த்த சமூக நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Previous articleஅண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?
Next articleஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!