TNPSC குருப் 4 தேர்விற்கான கலந்தாய்வு சான்றிதழ் சரிப்பார்ப்பு தேதி வெளியீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்விற்கான பணியிடங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 219 இடங்கள் நிரப்பட உள்ளது.
இதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் கலந்துக் கொள்ளலாம்.
எனவே, இதற்காக தேர்வானவர்களின் பெயர் வரிசையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குருப் தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
இதில் தேர்வு ஆனவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு குறித்து வருகிற ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
இதில் முதலாவதாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர் மற்றும் பண்டக காப்பாளர் முதலிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு நிகழ்வானது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் தேதி குறித்த தகவல்கள் தேர்வர்களுக்கு இ-மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலும் தேர்வர்களுக்கான கடிதம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களின் சான்றிதழ்கள் உண்மையாக இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்னர் அவர்களுக்கான பணி குறித்து கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒருவேளை தேர்வர்களின் சான்றிதழ்கள் சரியாக இல்லை என்னும் பட்சத்தில் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.