உலகத்தில் உள்ள சைவ நாடுகளின் பட்டியல்! உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா!!

0
32
List of vegetarian countries in the world! India ranked first in the world!!
List of vegetarian countries in the world! India ranked first in the world!!

உலகத்தில் உள்ள சைவ நாடுகளின் பட்டியல்! உலகளவில் முதலிடத்தை பிடித்த இந்தியா!!

உலகளவில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடக் கூடியவர்களின் பட்டியலில் சைவத்தில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் பல வகையான வித்தியாசமான உணவுகள் இருக்கின்றன. இந்த வித்தியாசமான உணவுகளில் உயிருடன் சாப்பிடக் கூடியது, உயிரில்லாமல் சாப்பிடக் கூடியது, மேலும் பல வகையான வித்தியாசமான உணவுகள் நம் உலகத்தில் கிடைக்கின்றது. வைனில்(Wine) ஊரவைத்த பாம்பு, கண்கள் 65, விலங்கு மலத்தில் தயாரிக்கப்படும் காபி, பூச்சி பிஸ்கட், பூச்சி சிப்ஸ், எலி வைன், பாதி அடைகாக்கப்பட்ட வாத்து முட்டை, நாய் கறி மற்றீம் பல வகையான வித்தியாசமான உணவுகள் உள்ளது.

ஆனால் உலகம் முழுவதும் மக்கள் இவை அனைத்தையும் சைவம் அசைவம் என்ற இரண்டு வகைகளுக்கு கீழ் உணவை பிரித்து உண்கின்றனர். உயிருள்ள விலங்குகளின் கறிகளை சாப்பிடுவதை அசைவம் என்றும் காய்கறிகளை சாப்பிடுவதை சைவம் என்றும் பிரித்துள்ளனர்.

இந்தியாவில் எந்த வகையான உணவாக இருந்தாலும் பந்தியளிக்கும் முறை இந்தியாவில் உள்ளது. குறிப்பாக சைவ உணவுகளுக்கு பந்தி போட்டு உணவு அளிக்கும் முறை இந்தியாவின் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கலாம். இதன் காரணமாகவே உலக அளவில் சைவ உணவு  சாப்பிடுபவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

பல தளங்களில் பல்வேறு வகையான ஆய்வுகளை செய்து புள்ளி விவரங்களை வெளியிடும் உலக அளவிலான அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 20 சதவீதம் முதல் 39 சதவீதம் வரை அசைவ உணவு உண்ணாதவர்களாக அதாவது சைவ உணவை மட்டும் சாப்பிடக்கூடியவர்கள் உள்ளனர். இதனால் இந்தியா இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்ததாக மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவ உணவை உண்கின்றனர். மெக்சிகோவை அடுத்து தைவான் நாட்டில் 14 சதவீதம் பேர் சைவ உணவை உண்கின்றனர்.

இஸ்ரேல் நாட்டில் 13 சதவீதம் பேரும், ஆஸ்திரேலியா நாட்டில் 12.1 சதவீதம் பேரும் ரஷ்யாவில் 1 சதவீத மக்களும் சைவ உணவை உண்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இங்கிலாந்து நாட்டில் 10 சதவீதம் மக்களும், அமேரிக்கா மற்றும் சீனாவில் 5 சதவீதம் மக்களும், ஜப்பான் நாட்டில் 9 சதவீதம் மக்களும் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்று அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை  போல இரஷ்யா நாடு அசைவ உணவு உண்பவர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரஷ்யாவில் 99 சதவீதம் மக்கள் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர்.