டிப்ரஷன் ஸ்ட்ரஸ் நீங்க.. பாலில் ஒரு இலையை கொதிக்க வைத்து பருகுங்கள்!! குடித்த சில நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!

0
101

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பல்வேறு பிரச்சனைகளை தினசரி வாழக்கையில் எதிர்கொண்டு வருகின்றோம்.குடும்பப் பிரச்சனை,பணப் பிரச்சனை,அலுவலக வேலைகள்,கடன் பிரச்சனை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் மன அழுத்தம்,மனச் சோர்வு போன்றவை கடுமையாக ஏற்படுகிறது.

இதில் கடும் மன அழுத்தத்தால் தவறான முடிவு எடுத்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.உலகத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் உரிய மருந்து இல்லை.

ஆனால் துளசி இலையை பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் மன ஆரோக்கியம் மேம்படும் என்று நம் பாரம்பரிய வைத்தியம் தெரிவிக்கிறது.

துளசி பால் செய்முறை

தேவையான பொருட்கள்:-

1)துளசி இலை – 10 முதல் 15 வரை
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

பூச்சி மற்றும் ஓட்டை இல்லாத துளசி இலைகளை பறித்து தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வையுங்கள்.

அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள துளசி இலைகளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.துளசி சாறு பாலில் நன்றாக இறங்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு துளசி பாலை வடிகட்டி கொள்ளுங்கள்.

பிறகு அதில் தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகுங்கள்.நீண்ட நாட்களாக மன அழுத்தம்,மனசோர்வுடன் போராடி வந்தவர்கள் இந்த துளசி பாலை குடித்தால் அதில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.

துளசி பால் ஆஸ்துமா,சளி,மூக்கடைப்பு,ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.டீ,காபிக்கு பதில் துளசி பாலை பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Previous articleஆங்கில புத்தாண்டு 2025: ஜனவரி முதல் நாளில் இதை செய்தால் சிறப்பான ஆண்டாக அமையும்!!
Next articleஇந்த விஷயம் தெரிந்தால்.. இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி ஏறிய மாட்டீங்க!!