உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

Photo of author

By Kowsalya

கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆயுஷ் நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது.

 

ஆயுஷ் அமைச்சகம் சொன்ன அனைத்துமே நான் வீட்டில் இருந்தே செய்ய கூடிய அருமையான ஆரோக்கியமான குறிப்புகள். அவை என்னவென்று பார்க்கலாம்.

 

1. சூடான நீரை மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரை பருக வேண்டும். நீருடன் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.

2. நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் அடையும் உணவு ஆக இருக்க வேண்டும். இஞ்சி, பூண்டு ,மஞ்சள், சீரகம் கொத்தமல்லி போன்ற வாசனைப் பொருட்களை உணவில் பயன்படுத்தும் பொழுது எளிதில் ஜீரணமாகும்.

3. ஆயுஷ் அமைச்சகம் சொன்ன தகவலின் படி உடற்பயிற்சிகள் மற்றும் தியானங்களை 30 நிமிடம் செய்ய வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்த்து இரவு 8 மணி நேர தூக்கம் அவசியம் ஆக இருக்க வேண்டும்.

4. அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை 150 மில்லி பாலில் கலந்து தினமும் 2 வேளை குடிக்கலாம்.

5. குடுச்சி கன்வதி (500 மி.கி) அல்லது அஸ்வகந்தா மாத்திரை (500 மி.கி) சாப்பிட்ட பிறகு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

6. மூலிகை டீ அல்லது துளசி, இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றால் செய்யப்பட்ட காபி தண்ணீரைக் குடிக்கவும். தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து பருகலாம்.

7. நீராவி பிடிக்கலாம். அதில் துளசி இலை மற்றும் கற்பூரத்தை சேர்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதிக சூடான நீரை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

8. கிராம்பு மற்றும் திரிபலா பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது தொண்டைவலி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கும்.

9. வாயில் ஒன்று இரண்டு கிராம்புகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.

10. தினம் ஒரு நெல்லிக் கனியை சாப்பிடலாம்.

11. தினமும் நீரை பருக கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம், கிராம்பு, துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

12. கொரோனாவால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும் பொழுது ராகியினால் ஆன கஞ்சியை குடித்து வரலாம்.

இவ்வாறு ஆயூஷ் நிர்வாகம் கூறியது.