உங்கள் பர்ஸில் பணம் இருந்து கொண்டே இருக்க.. முதலில் இதை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்கள் பர்ஸில் பணம் இருந்து கொண்டே இருக்க.. முதலில் இதை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும்.

அவசரத் தேவைக்காக நம் பர்சில் எப்பொழுதும் பணம் இருப்பது மிகவும் முக்கியம். அதன்படி நம் பர்சில் நிரந்தரமாக பணம் தங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை செய்தால் நிச்சயம் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

*பட்டை

*பணம் – 10 ரூபாய் இருந்தாலும் சரி

*விளக்கு

*எண்ணெய்

*திரி

பரிகாரம் செய்யும் முறை…

வாசனை நிறைந்த சமையல் பொருளான பட்டை சிறு துண்டு எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஒரு சிட்டிகை அளவு எடுத்து உங்கள் பர்ஸில் உள்ள பணத்தின் மீது தூவி விடவும். பர்ஸில் 10 ரூபாய் இருந்தாலும் சரி.

பட்டை தூளை பர்ஸில் உள்ள பணத்தின் மீது தூவுவதற்கு முன்னர் பூஜை அறையில் உங்கள் பணப் பர்ஸை ஒரு தட்டில் வைத்து மஹாலட்சுமி தேவியை நன்கு வணங்கி இந்த மந்திரத்தை சொல்லி தூவ வேண்டும்.

மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

லஷ்மி ஆக்ச்ச மம மந்திரே

திஷ்ட திஷ்ட சுவாஹா

இதை ஒன்பது முறை சொல்லி பணத்தின் மீது தூவி தூப தீபம் காட்டி வழிபட்ட பின் பர்ஸை எடுத்து உங்கள் பாக்கெட்டில் அல்லது பேக்கில் வைத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து 2 மாதங்கள் (9 வெள்ளிக்கிழமை) செய்து வர பண வரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.