இங்கிலாந்தை வீழ்த்த ஆக்ரோசமாக ஆடவேண்டும்

Photo of author

By Parthipan K

இங்கிலாந்தை வீழ்த்த ஆக்ரோசமாக ஆடவேண்டும்

Parthipan K

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டிலும் பாகிஸ்தான் அணி திணறி வருகிறது. அபித் அலி, ரிஸ்வான் ஆகியோர் அரைசதம்  அடித்ததால் 200 ரன்களை கடந்தது.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் பேசும்போது  பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவர்களுடைய வழக்கமான ஷாட்ஸ் ஆட தயங்குகிறார்கள். அவர்கள் அவுட்டான பெரும்பாலான பந்துகள்  பேட் காலுக்குப்பி்ன்னாடிதான் இருந்திருக்கும். நாம் பந்தை சந்திக்கும் போது பேட் காலுக்கு முன்னாள் இருக்க வேண்டும் இங்கிலாந்தை வீழ்த்த ஆக்ரோசமாக ஆடவேண்டும் என்று வலியுறுத்தினார்.