மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க!

0
297
#image_title

மாரடைப்பு தடுக்க அடங்காத சர்க்கரையை அடக்கி வைக்க! இந்த ஜூசை வாரத்திற்கு 2 நாள் மட்டும் குடிங்க! 

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூசை வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்து வர சர்க்கரையானது கட்டுக்குள் வரும். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் கொண்ட அற்புதமான சத்துள்ள பானம் இது.

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், மாங்கனிசு போன்றவை இதில் அதிகம் அடங்கியுள்ளன.

** இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் நூல்கோல் அல்லது நூக்கல். இந்தக் காயின் முக்கியமான பயனே ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது தான். உங்களுக்கு சுகரின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை மளமளவென குறைக்க இது உதவும். அது மட்டும் இல்லாமல் அதிக சர்க்கரையினால் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளையும் இது குறைக்கும்.

** ஒரு நூல் கோலை எடுத்துக் கொண்டு அதை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

** துண்டு துண்டாக நறுக்கிய நூக்கலை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும். இதில் பத்து மிளகு, சிறிது இந்து உப்பு சேர்க்கவும். இதை 200 மிலி தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

** இதை ஒரு டம்ளரில் ஊற்றி அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை குடித்த அரை மணி நேரத்திற்கு வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு வாரத்திற்கு இரண்டு நாட்கள் குடித்து வர பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

1. அதேபோல் உடலில் எங்கு வீக்கம், வலி இருந்தாலும் அதை நீக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சினையை நீக்குவதோடு மட்டுமல்லாமல் உடலில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்கி நமது உடல் எடையையும் குறைக்கக்கூடியது.

2. இது வளர்ச்சியை மாற்றத்தை சீராக்கக் கூடியது. இதயத்தை பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். பித்தநீரை வெளியேற்றும். இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

3. இதில் பொட்டாசியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்பை வலுவாக்கும். மனப்பதட்டம், மன பயம் போன்றவற்றை நீக்க கூடியது.

4. இது சர்க்கரையின் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. புற்றுநோய் கட்டிகள் ஏற்கனவே இருந்தாலும் அதன் வீரியத்தை குறைக்கும். குறிப்பாக மார்பகம், பெருங்குடல் மலக்குடல், இங்கெல்லாம் வருகின்ற புற்றுநோயை இது தடுக்கும்.

 

Previous articleகாங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!
Next articleஇணையவழி சூதாட்டங்களுக்கு மத்திய அரசே தடை விதிப்பு : அதிகாரி விளக்கம்!