காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!

0
110
#image_title

காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தாலும் நாட்டுக்காக சேவையாற்ற என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டே இருப்பேன்.

கர்நாடக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிப் பேச்சு.

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹம்னாபாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோதி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் இது வெறும் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல எனவும் நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான தேர்தல் என்றும் கர்நாடகாவில் இரட்டை என்ஜின் கொண்ட அரசு அமைந்தால் மட்டுமே கர்நாடகாவை நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

பாஜக ஆட்சியில் தான் கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 30 ஆயிரம் கோடியாக இருந்த அந்நிய நேரடி முதலீடு பாஜக ஆட்சியில் 90 ஆயிரம் கோடியாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களில் தங்கள் ஆட்சியில் 60க்கும் மேற்பட்ட நீர்பாசன திட்டங்களை தாங்கள் நிறைவேற்றி இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் விவசாயிகளை வெறுப்பவர்கள் என தெரிவித்த பிரதமர் விவசாயிகளுக்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லை எனவும் விவசாயிகளுக்காக கிசான் சம்மான் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்திய போது பயனாளிகளின் பெயர்களை கூட அனுப்பவில்லை என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் ஊழலையும் சுயநல அரசியலையும் வெளிப்படுத்துவோரை காங்கிரஸ் கட்சி வெறுப்பதாக குற்றம் சாட்டிய அவர் தற்போதைய தேர்தலிலும் காங்கிரஸ் கட்சித் தன்னை அவதூறு செய்ய துவங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியினர் இதுவரை தன்னை 91 முறை பல்வேறு வழிகளில் அவதூறு செய்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் தன்னை அவதூறு செய்வதற்காக செலவிட்ட நேரத்தை நல்ல நிர்வாகத்திற்காக செலவிட்டிருந்தால் காங்கிரஸ் கட்சியின் நிலை இத்தனை பரிதாபமாக இருந்திருக்காது என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி அம்பேத்கர் சாவர்க்கர் உள்ளிட்ட மிக உயர்ந்த தலைவர்களை கூட விட்டு வைக்காமல் அனைவரையும் அவதூறு செய்ததாக குற்றம் சாட்டிய பிரதமர் உயர்ந்த தலைவர்களைப் போல தன்னையும் அவதூறு செய்வதை கௌரவமாக கருதுவதாக கூறினார்.

காங்கிரட் கட்சி எவ்வளவு தூரம் தன்னை தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தாலும் மக்களுக்காக சேவையாற்ற தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டே இருப்பேன் என பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

author avatar
Savitha