இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும்.!! இன்றைய (11-10-2021) ராசி பலன்கள்.!!

0
138

இன்றைய (11-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். போட்டிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அனுபவங்கள் மேம்படக்கூடிய நாள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். தனவரவுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். உடன் பணிபுரிபவர்களின் மூலம் பொறுப்புகளும், அலைச்சலும் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நீண்ட கால முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.நன்மைகள் உண்டாகும் நாள்.

கடகம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் நன்மையான செய்திகள் கிடைக்கும். சிக்கனத்துடன் செயல்படுவது சேமிப்புகளை மேம்படுத்தும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

சிம்மம்

எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவுபெறும். பொன், பொருள் சேர்க்கைகள் சிலருக்கு உண்டாகும். மேன்மை பிறக்கும் நாள்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களில் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருப்தி உண்டாகும் நாள்.

துலாம்

நண்பர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் அகலும். உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். தேவையில்லாத வாதங்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.

விருச்சிகம்

கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்.

தனுசு

வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலக பணிகளில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். முதலீடுகள் மேம்படும் நாள்.

மகரம்

பூர்வீக சொத்துக்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களின் மூலம் வரவுகள் அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் பணிகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும்.நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புத்திர வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பமும், அமைதியின்மையும் ஏற்பட்டு நீங்கும். இழுபறிகள் குறையும் நாள்.

மீனம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியாக இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

Previous articleகுடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது-அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.!!
Next articleடெல்லியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்.!!