இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 57,759 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பினோரின் எண்ணிக்கை 16,95,850 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தொற்று காரணமாக 950 பேர், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 47,138 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது. இதுவரை டெல்லியில் 1,48,504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,153 பேர் இதுவரை அங்கு பலியாகி உள்ளனர்.