இன்று மாலை நடைபெற இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! பரபரப்பில் அதிமுக தலைமை அலுவலகம்!

Photo of author

By Sakthi

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருக்கிறது. அதோடு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அந்தக் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் சட்டசபைக்குள் நுழைய இருக்கிறது.இந்த சூழ்நிலையில், அதிமுக 65 தொடங்க இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்தக் கூட்டணி கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து 26 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கிற அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தலைமை தாங்க இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பு, நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் மே மாதம் 7ஆம் தேதி மாலை நான்கு முப்பது மணி அளவில் நடைபெற இருக்கிறது இந்த கூட்டம் ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்திற்கு இ.பி.எஸ், ஒ.பி.எஸ் ஆகியோர் தலைமை தாங்க இருக்கிறார்கள். நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தக் கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சியின் கொறடா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் சட்டசபையில் அதிமுகவின் உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரையும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.