தங்கத்தின் விலை வீழ்ச்சி..பொதுமக்கள் மகிழ்ச்சி.! இன்றைய விலை நிலவரம்.!!

0
245

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.35,856-க்கு விற்பனையாகிறது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்ததுள்ளது.‌

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.35,856-க்கும், கிராமுக்கு ரூ.21 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,482-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, ரூ.67.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleவன்னியர் இட ஒதுக்கீட்டை பெறாமல் ஓய மாட்டேன்- மருத்துவர் ராமதாஸ்.!!
Next articleகாரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!