இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

0
156

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் எதிர் நோக்கிய காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அதிகாரிகள் கூறினார்கள்.

இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு.நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அரசு உத்தரவை மீறி இயங்கும் பள்ளி கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleகுழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு!
Next articleஇந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?..