இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும் நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் அவர்களுக்கான மருத்துவ இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 10,425 மருத்துவ இடங்களை பூர்த்தி செய்வதற்காக நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகின்றது .எம்.பி.பி எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான கலாந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மேலும் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.அந்த தேதியில் மாணவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகள் வழங்கப்படும் எனவும் மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.