சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

0
88
"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்களில் 54 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
https://twitter.com/draramadoss/status/1576783963913273344
தொழிலாளர் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன் படி 2 ஆண்டுகளில் 48 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அதன்படி 13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 250 பேரும் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். அதை செய்வதற்கு பதிலாக பணிநீக்கம் செய்வது கண்டிக்கத்தக்கது.
https://twitter.com/draramadoss/status/1576783967579095040
சட்டவிரோத பணிநீக்கத்தை கண்டித்தும், நீக்கப்பட்டதைக் கண்டித்தும் சுங்கச்சாவடிகளில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் நெடுஞ்சாலைகள் ஆணையமோ, மாவட்ட நிர்வாகமோ பேச்சு நடத்த முன்வராதது பெரும் அநீதி ஆகும்.
https://twitter.com/draramadoss/status/1576783971026812928
ஆட்குறைப்புக்கான எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ள இந்த பணி நீக்கத்தை தமிழக அரசு தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்குவதற்கும் சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்!
https://twitter.com/draramadoss/status/1576783979390242816
தற்போது வரை இவர்கள் போராட்டம் நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.எந்த ஒரு நடைமுரைகளுயும் பின்பற்றாமல் திடீரென்று இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.