முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? இந்தியா vs ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.!!

0
191

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது.

இதில், இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்டன் அணியும் மோதுகின்றன.

இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணியுடன் விளையாடிய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனால், காரணமாக இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை, இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்னும் ஒரு புள்ளி கூட பெறாமல் 5-வது இடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை 3 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணியின் பேட்டிங்கை பொருத்தவரை கேப்டன் விராட் கோலியை தவிர வேற யாரும் பெரிதாக இன்னும் பேட்டிங் செய்யவில்லை. அதேபோல், பவுலிங்கில் பும்ரா மட்டுமே சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தி வருகிறார்.

ஆனால், ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியில் முஜிப் ரகுமான், ரஷித் கான், முகமது நபி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.

தொடர்ந்து போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றதால் இன்றைய தினம் கட்டாய வெற்றி பெற வேண்டி விளையாடவுள்ளது. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous articleஅதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை! தனியார் பேருந்துகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு!
Next article2022 ஆம் வருடத்தின் அரசு பொது விடுமுறை தினங்கள்!