2-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

0
218

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது .

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

அன்று (24-10-2021) பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதே விலைக்கு விற்பனையாகியாகிறது. தொடர்ந்து 2வது நாளாக அதே விலைக்கு விற்பனையாகிறது.

Previous articleஐயா என்னை விட்டுடுங்க ஐயா நா அப்படி சொல்லல! அமைச்சரை கதறவிட்ட அண்ணாமலை!
Next articleநவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை.!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here