ஐயா என்னை விட்டுடுங்க ஐயா நா அப்படி சொல்லல! அமைச்சரை கதறவிட்ட அண்ணாமலை!

0
60

சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கின்ற பரத்வாஜேஸ்வரர் திருக்கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் உலோக திருமேனி பாதுகாப்பு அறையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார், அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் தெரிவிக்கவில்லை பத்திரிக்கைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லி இருக்கின்றார் அன்பால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம், நிலை தடுமாறும் போது கை கொடுத்தும் காப்பாற்றலாம் என தெரிவித்து இருக்கிறார்.

மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய ஆலயங்களில் உலக திருமேனிகளை பாதுகாக்க 3075 அறைகள் மிக விரைவில் கட்டமைக்கப்படும் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய மதுபான கடைகளை அகற்றுவதற்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார் சேகர்பாபு.

அதேபோல பராமரிப்பு இல்லாத திருக்கோவில்களை கண்டுபிடித்து அவற்றை மேம்படுத்தும் விதத்தில் அதற்கான வேலைகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது, சுற்றுலாத் துறையுடன் ஒன்றிணைந்து ஆன்மிக சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும். நிலங்கள் ஆக்கிரமிப்பில் யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் குயின்ஸ்லாந்திடம் இருந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்களிடம் தீட்சிதர்கள் கடுமையாக நடந்து கொள்வது குறித்து கோவில் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் மன உளைச்சல் இல்லாமல் இறை வழிபாடு செய்யத் தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு நான் தொகுதி அரசியல் செய்வதில்லை கடத்தப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்க மத்திய அரசுடன் ஒன்றிணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கைபேசி எடுத்து செல்ல அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும், அமைச்சர் சேகர் பாபு தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.