இன்றைய (18-10-2021) ராசி பலன்கள்.!! ஐப்பசி-1 ஞாயிற்றுக்கிழமை .!!

0
251

மேஷம்

புது விஷயங்களில் ஆர்வம் கூடும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்

குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை முன்னேற்றம் இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மிதுனம்

சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். மன வலிமை கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கடகம்

பொருள் பொருள் சேர்க்கை உண்டாகும். இழுப்பறியில் இருந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்மம்

குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

கன்னி

இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

துலாம்

நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிகம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

மகரம்

வெளியாட்களால் சில சமயங்களில் சங்கடங்கள் வரும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்பம்

குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். நட்பு வழியில் சில விரயங்கள் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீனம்

எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். வீட்டுச் பராமரிப்பு செலவு கூடும். பெற்றோர்கள் ஆலோசனை கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

Previous article7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!
Next articleசெல்போன் வெடித்து, இளைஞர் உயிரிழப்பு