7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!

0
69

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஆனால் அதனை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவும் சரி, பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்ற சமயத்தில் 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவிக்க, இதுதொடர்பாக ஆளுனரிடம் முறையிட்டால் ஆளுநர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, இதனால் ஆளுநருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிகழ்வு நடைபெற்று இருக்கிறது.

இதற்கிடையில் ராஜீவ்காந்தி கொலையாளிகள் உடைய விடுதலை தாமதமாவது முதலமைச்சர் ஸ்டாலினுடைய அலட்சியத்தால் தான் என்று திமுகவைச் சார்ந்த அமைச்சரே தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது திருச்சி மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி ஐடி ஐ தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைச்சாலைகளில் மட்டும்தான் இருக்கிறது. ஒன்று ராஜஸ்தான் மாநிலம் மற்றொன்று ஜெய்ப்பூர் மாநிலம் இதற்கு அடுத்ததாக நம்முடைய திருச்சி மத்திய சிறைச்சாலையில் தான் இருக்கிறது இங்கே ஐடிஐ படித்து சென்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது இளம் சிறைவாசிகள் மற்றும் 10 12 போன்ற வகுப்புகள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது. கல்லூரி படிப்பு படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதற்கான வசதி செய்து கொடுக்கப்படுகிறது. கூடுதல் நேரம் பணி செய்யும் சிறை காவலர்களுக்கான படியை 200 ரூபாயிலிருந்து அதிகரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக பேசிய அவர் பத்து வருட காலங்கள் ஆயுள் தண்டனை கைதிகளாக இருப்பவர்களை விடுவிப்பதற்கு முதலமைச்சர் ஆணையிட்டு இருக்கிறார். அதில் சில நிபந்தனைகள் இருக்கிறது வெடிகுண்டு வழக்கு, தேசத்துரோக வழக்கு, உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது ஆகவே யார் யாரை விடுதலை செய்யலாம் என்ற பட்டியலை தயார் செய்து வருகின்றோம் என தெரிவித்திருக்கிறார். பட்டியல் தயாரிப்பு பணி முடிவடைய இன்னும் இருபது தினங்கள் ஆகலாம் என கூறியிருக்கிறார் அமைச்சர் ரகுபதி.

அப்போது ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை தொடர்பாக உரையாற்றிய அவர் 7 பேர் விடுதலையில் மற்ற கட்சிகளை விட முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அதனை அவருடைய லட்சியமாக வைத்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார். ஏழு பேரில் ராமச்சந்திரன் அவர்களின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக, பாதிக்கப்பட்ட இருக்கின்ற காரணத்தால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்துபேசி பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கூறியிருக்கிறார் அமைச்சர் ரகுபதி.