இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

Photo of author

By Savitha

இன்று கூடுகிறது புதிய தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் ஆலோசனை குழு கூட்டம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சந்து பொறுப்பேற்றனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் புதிதாக தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் ஆகியோர் கூடும் ஆலோசனை குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து வந்தனர்.

மேலும் மாநில தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறதா பாதுகாப்பு பணிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது குறித்த இறுதிக்கட்ட அறிக்கையை முழுமையாக ஆராயவே இந்த கூட்டம் கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுவாக பூத் கூட்டம் என்று கூறப்படும் மூன்று தேர்தல் ஆணையர்களும் கூடும் ஆலோசனை கூட்டத்திற்க்கு இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இன்று மாலை அல்லது நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.