ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.? பொதுமக்கள் அதிர்ச்சி.!!

Photo of author

By Vijay

ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.? பொதுமக்கள் அதிர்ச்சி.!!

Vijay

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி விலை இன்று ஒரே நாளில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் செடியில் உள்ள தக்காளிகள் அழுகி உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், வெளியூரிலிருந்து வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தக்காளி விலை இன்று ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ .20 முதல் ரூ . 30 வரை விற்கப்பட்டு வந்த தக்காளி விலை தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும், சில்லரை வணிகத்தில் ஒரு கிலோ ஹைபிரிட் தக்காளி ரூ . 45 க்கும் நாட்டு தக்காளி ரூ .50க்கும் விற்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல, மதுரையில் சில்லறை வணிகத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இத்தகைய விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விலை உயர்வு ஒரு புறம் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தாலும் மறுபுறம் வெளியூர் வரத்து குறைந்துள்ளதால், நாட்டு தக்காளியின் கொள்முதல் விலை உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு தக்காளியின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.