பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறிய நமிதா மாரிமுத்து.!! ரசிகர்கள் சோகம்.!!

0
225

பிக்பாஸ் வீட்டில் இருந்து மாற்று பாலினத்தவர் ஆன நமிதா மாரிமுத்து வெளியேறியுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பமானது.

இதில், 18 போட்டியாளர்களில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். முதன்முறையாக திருநங்கை போட்டியாளர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது. திருநங்கை சமுதாயத்திற்கே பெரிய வரவேற்பை சமூகத்தில் ஏற்படும் என நம்பி அவர் உள்ளே நுழைந்து உள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Previous articleஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.? பொதுமக்கள் அதிர்ச்சி.!!
Next articleவிஜய் டிவியை ஓரங்கட்டி விட்டு பிரபல டிவி சீரியலில் களமிறங்கிய செந்தில்- ராஜலட்சுமி.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here