பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்ட தோக்கியோ விளையாட்டரங்குகள்

0
132

தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட விளையாட்டரங்குகள் தற்போது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளன. அந்த அரங்குகளில் வீரர்களும் பயிற்சியைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களை அடுத்த மாத மத்தியில் திறந்துவிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா நோய்ப்பரவல் நிலைமையைப் பொறுத்துத்தான் விளையாட்டு அரங்குகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தோக்கியோ திட்டமிட்டிருந்தது. கொரோனா கிருமிப்பரவல் காரணமாக அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளுக்காக சுமார் 10 பில்லியன் டாலரை ஜப்பான் செலவு செய்துள்ளது. போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டதால் ஜப்பானுக்கு 800 மில்லியன் டாலருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

Previous articleவாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?
Next articleஒலிம்பிக் போட்டிகளை ஏற்றுநடத்த கத்தார் விருப்பம் தெரிவித்துள்ளது