இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!!

Photo of author

By Amutha

இன்று மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  மேலும் உயர வாய்ப்பு கலக்கத்தில் மக்கள்!!

தக்காளியின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் மக்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தக்காளியின் விலையானது தினந்தோறும் ஜெட் வேகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பத்து ரூபாய் குறைந்தால் அதற்கு பதிலாக இரு மடங்காக இருபது ரூபாய் விலை ஏறுகிறது. ஏராளமான மக்கள் குழம்புக்கு தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். அந்த அளவுக்கு இந்த விலையேற்றமானது விண்ணை முட்டி நிற்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ரூபாய் 15 அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்ற தக்காளி, நேற்று மேலும் பத்து ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் அதிர்ச்சி தரும் வண்ணம் 30 ரூபாய் அதிகரித்து தற்போது கிலோ ரூ.140க்கு விற்கப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதை விளைவு உயர்வு சில்லறை விற்பனையில் இன்னும் அதிகரிக்க கூடும். அதன்படி சில்லறை விற்பனையில் 150 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

1100 டன் தேவையுள்ள இடத்தில் வெறும் 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதால் வரத்து குறைவினால் இந்த விலையேற்றம் ஏற்பட்டதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் உற்பத்தியும் குறைவு ஏற்பட்டுள்ளது.

அடுத்ததாக இஞ்சி ஒரு கிலோ ரூபாய் 250க்கும் பட்டாணி ஒரு கிலோ ரூபாய் 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.