நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது.

இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் உகர்ந்த நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

இந்த ஆனிமாத பவுர்ணமியை அதிக அளவில் வட இந்தியர்கள் கொண்டாடுவார்கள். இதே போன்று ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்களும் இதனை கடைபிடிப்பார்கள்.

மேலும் நாளை திருவண்ணாமலை ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தவிருப்பதால் அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காவல் துறையினர் கண்காணிப்பில் தீவிர ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கிரிவல பாதையில்  பக்கதர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பபட்டிருந்தது.

இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் அவர்கள் இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு ரயில்வே துறை சார்பில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீடிக்கப்பட்டுள்ளது.அதில் தாம்பரம் மற்றும் விழுப்புரம் வரையும்  அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் வரையும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.