ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றானது தற்போது தான் குறைந்து காணப்பட்டது. மீண்டும் அடுத்த அலைக்கனா பாதிப்பு தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியவில்லை. பொது தேர்வு நடத்த முடியவில்லை. பொதுத் தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் கூட்டம் கூட நேரிடும். இதனால் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவும். இதனால் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. மானவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இவ்வாறு இருக்கையில் இம்முறையும் தொற்று பாதிப்பு மூன்றாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இம்முறை அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது.
பொதுத்தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என்ற பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அவரவர் பள்ளிகளிலேயே தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. நாளை 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. இதனால் வெப்பநிலை சற்று அதிகமாகவே காணப்படும். இவ்வாறு இருக்கும் வேளையில் தொடக்கக் கல்வி மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருவது மிகவும் சிரமத்தை கொடுக்கும், என பலர் கூறிவந்தனர். அதனால் அவர்களுக்கு கோடை விடுமுறை முன்கூட்டி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அவரவர் தேர்வின் போது மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது. இதர நாட்களில் பள்ளிக்கு வர தேவை இல்லை என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நாளை முதல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி விடுமுறை. தேர்வு தேதி அன்று மட்டும் பள்ளிக்கு வந்த தேர்வை எழுதி செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.