பொதுமக்கள் கோடை காலம் முடியும் வரை இதை கட்டாயம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை!

0
85

தமிழகத்தில் கடந்த பங்குனி மாதம் முதலே வெயில் காலம் தொடங்கிவிட்டதால் தொடர்ந்து பொது மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் கூலி வேலைக்கு செல்வோர் கட்டிட தொழிலாளிகள் மற்றும் அன்றாட வேலைகளை செய்து வருபவர்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் விவசாயிகள் இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை பெய்யாததால் சாகுபடி செய்த நிலங்கள் அனைத்தும் வீணாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலைக்காளாகியிருக்கிறார்கள்.

அதிலும் சித்திரை மாதம் பிறந்ததிலிருந்து வெயிலின் தாக்கம் மிக கடுமையாக நீடித்து வருகிறது, அவ்வாறு இருக்க தற்சமயம் இன்று முதல் சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளது. ஆகவே வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாவதற்கான வாய்ப்புள்ளது, இதனால் பலரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். அதோடு முற்பகல் மற்றும் நண்பகல் சமயத்தில் வீட்டில் விட்டு வெளியே வருவதற்கும் கூட பொதுமக்கள் அஞ்சி நடுங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரியை கடந்திருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், இன்று முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் ஆரம்பமாகி வருகின்ற 28ம் தேதியுடன் முடிவு பெறுகிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது.

அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திர காலகட்டத்தில் இந்த வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக முதல் 7️ நாட்களில் வெயிலின் தாக்கம் மெல்ல,மெல்ல, அதிகரிக்கும் வண்ணம் இருந்து வரும். அடுத்த 1 வாரம் அதிகளவில் இந்த வெயிலின் தாக்கம் காணப்படும். கடைசி ஒருவாரத்தில் படிப்படியாக இந்த வெயிலின் தாக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த சூழ்நிலையில், வெப்பம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் உடலில் பாதிப்பை உண்டாக்கும் என்ற காரணத்தால், மது வகைகளை அருந்துவது உள்ளிட்டவற்றை குடிமகன்கள் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதாவது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் உரையாற்றிய அவர், கோடைகாலம் முடியும் வரையில் பொது மக்கள் எல்லோரும் வெளியில் செல்லும் போது தண்ணீர்ப்பாட்டிலை எடுத்துச் செல்வது மிகவும் நன்று. தாகம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கோடைகாலம் என்று வந்துவிட்ட பிறகு போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

தேவையில்லாமல் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கின்ற அவர், வெயிலில் பயணம் செய்யும்போது தலையில் துண்டு அல்லது தொப்பி இல்லையென்றால் துணி உள்ளிட்ட எதையாவது ஒன்றை அணிந்து கொண்டு தலையை மறைத்துக் கொள்வது மிகவும் நல்லது என தெரிவித்திருக்கிறார். அதே போல கால்களில் செருப்பின்றி வெளியே செல்வதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் எனவும், தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர்.

மேலும் காற்றோட்டமான வீடுகளில் தங்கியிருப்பது அவசியமாகும். கோடை வெயிலின் போது வெளியே செல்லும் சமயத்தில் முடிந்தவரை எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளை பருகவேண்டும். தேநீர், காபி உள்ளிட்டவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தெரிவித்திருக்கிறார். பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கின்ற குளிர்பானங்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

கோடைகாலத்தில் உடலில் பாதிப்பை உண்டாக்கும் என்ற காரணத்தால், மது அருந்துவதை குடிமகன்கள் குறைத்துக் கொள்ள வேண்டும், இந்த சத்து அதிகமாக இருக்கின்ற உணவுகளை தவிர்த்து பழைய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற வாகனங்களின் மீது குழந்தைகளை விளையாடுவதற்கு அனுமதிக்கக்கூடாது, கோடை வெயிலின் பாதிப்புக்காளானவர்களுக்கு எல்லா அரசு மருத்துவமனைகளிலும் படுகைகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஏதாவது உடல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும், என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.