இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!!

0
28
#image_title

இதற்கு நாளை தான் கடைசி நாள்!!! எல்லாரும் சீக்கிரமா மாத்திருங்க!!!

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுத்த காலக்கெடு நாளையுடன் அதாவது செபடம்பர் 30ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை கைவசம் வைத்திருப்பவர்கள் அனைரும் மாற்றிக் கொள்ளுமாறு தகவல் வெளியாகி இருக்கின்றது.

கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு என்ற பெயரில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய்களுக்கு மாற்றாக புதிதாக 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மே மாதம் 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் செப்டம்பர் 30ம் தேதிவரை மக்கள் கைவசம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் எந்தவித ஆவணமும் அடையாள அட்டையும் கொடுக்காமல் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

அதன்படி 2000 ரூபாய் நோட்டுகளை மற்றிக்கொள்ளவும் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன் அதாவது செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மேலும் இந்த காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

எனவே 2000 ரூபாய் நோட்டுகளை கைவசம் வைத்துள்ளவர்கள் அனைவரும் இன்றும்(செப்டம்பர்29) நாளையும்(செப்டம்பர்30) வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.

செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 3.32லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் புழக்கத்தில் இருந்த 100 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 93 சதவீதம் திரும்பப் பெற்றுள்ளதாகவும் இன்னும் 7 சதவீதம் திரும்பப் பெறவில்லை என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.