அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதாவது ஐடிஐ-ல் சேர்வதற்கான கடைசி காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது.
அரசு தொழில் பயிற்சி நிலையங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-க்கான மாணவர் சேர்க்கை மாநில கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு சீட் செயற்குழுக்கான ஒதுக்கீட்டு விவரங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டில் சேர்கைக்கான விவரங்கள் 04-07-2023 அன்று www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை மேல் சொன்ன இணையதளத்திற்க்குள் சென்று லாகின் செய்து மாணவர்களது விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தங்களது சேர்க்கைய உறுதி செய்து கொள்ள மேல் சொன்ன இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வு செய்த தொழிற் பிரிவுகளை 12-07-2023-க்குள் சம்மந்தப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு நேரில் சென்று மாணவர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று உரிய கட்டணம் செலுத்தி தங்களது சேர்க்கையினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இதை பயன்படுத்தி அரசின் தொழிற் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.