காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.