பெண் பயணியின் மீது வாலிபர் சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு!

0
176
the-matter-of-the-teenager-urinating-on-the-female-passenger-30-lakh-fined-to-air-india
the-matter-of-the-teenager-urinating-on-the-female-passenger-30-lakh-fined-to-air-india

பெண் பயணியின் மீது வாலிபர் சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு!

கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த  ஒருவர் குடிபோதையில் அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கைக்கு அருகே நின்று சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரமானது வெளியே வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் இது தொடர்பாக விசாரணையில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த என்பதும் தெரியவந்தது. மேலும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால் விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து இயக்குனர் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுநீர் கழித்த நபரின் பெயர் சங்கர் மிஸ்ரா என்பதும் தெரிய வந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் சங்கர் மிஸ்ரா  தலைமறைவாகி இருந்துள்ளார். அவரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறு வாரங்களுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஏர் இந்திய நிறுவனத்திற்கு ரூ 30 லட்சம் அபராதம் விகித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை மூன்று மாதத்திற்கு ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K