வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

0
63
#image_title
வயிற்றில் உண்டாகும் நாக்குப் பூச்சி! இதை ஒழிக்க இந்த இரண்டு பொருட்கள் போதும்
நமது வயிற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நாக்குப் பூச்சிகளை வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு ஒழிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் வயிற்றில் உள்ள மலக்குடலில்  வெண்மை நிறத்தில் இருக்கக்கூடிய பூச்சிகள் உருவாகும். இதுவே நாக்குப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது. மலக்குடலில் ஏற்படுவதால் இதை மலக் கிருமிகள் என்றும் அழைப்பர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த நாக்குப் பூச்சி தொந்தரவுகள் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக இனிப்புச் சுவை கொண்ட பண்டங்களை சாப்பிடுவார்கள். இதன் காரணமாக வயிற்றில் நாக்குப் பூச்சி ஏற்படுகின்றது.
இந்த நாக்குப் பூச்சிகள் நம்முடைய மலக்குடலில் இருந்து இரவு நேரத்தில் வெளியே வந்துவிடுகின்றது. இதனால் நம்முடைய ஆசன வாயில் எரிச்சல் ஏற்படும்.  அரிப்புத் தன்மையை உண்டாக்கும். குழந்தைகளைப் பொறுக்த வரை ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்குத் தான் அதிக பாதிப்பை உருவாக்கி விடும்.
இந்த நாக்குப்பூச்சியை வெளியேற்ற மற்றும் முற்றிலும் அழிக்க நாம் வெறும் இரண்டு பொருட்களை பயன்படுத்தலாம். அந்த இரண்டு பொருட்கள் வந்து ஒன்று பாகற்காய். மற்றொன்று சுண்டைக்காய் ஆகும். இந்த இரண்டு பொருட்களையும் வைத்து நாம் வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளை ஒழித்து வெளியேற்றலாம்.
நாக்குப் பூச்சிகளை ஒழிக்க நாம் பாகற்காயை பச்சையாக சாப்பிடலாம். அல்லது பாகற்காயை பயன்படுத்தி சூப் செய்து குடிக்கலாம். இதன் கலப்புத் தன்மை  மற்றும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மையை அளிக்கும். நாக்குப் பூச்சியை அழித்து வெளியேற்றும்.
நாக்குப் பூச்சிகளை ஒழித்து வெளியேற்ற நாம் சுண்டைக்காயை சமைத்து சாப்பிடலாம். மேலும் சுண்டைக்காய் வற்றை பொறித்து சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளை ஒழித்து வெளியேற்றலாம். சுண்டைக்காயை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கபத்தை நீக்கலாம். வாரத்திற்கு 2 முதல் 3 வரை சுண்டைக்காயை சாப்பிட்டு வரும்பொழுது அஜீரணக் கோளாறு குணமடையும்.