புரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்!

0
181

புரதச்சத்து அதிகம் உள்ள டாப் 10  உணவுகள்!

நமது உடலின் வளர்ச்சிக்கும் தசைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான சத்துக்களில் ஒன்றுதான் புரதச்சத்து. நமது உடலின் எலும்புகள், தசைகள், நரம்புகள், ஆரோக்கியமாக இருக்க புரதச்சத்து மிகவும் அவசியம்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த புரதச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை பார்ப்போம்.

1. பீப்/ மட்டன்:

அசைவ உணவுகளில் இதில்தான் அதிக அளவு புரதம் உள்ளது. 100 கிராம் பீப் அல்லது மட்டனில் 25 – 30 கிராம் புரதச்சத்து உள்ளது.

2. வேர்க்கடலை: நாம் வேர்க்கடலையின் மகிமையை அறியாமல் அதனை தள்ளி வைக்கிறோம். இதில் 26 கிராம் புரதச்சத்து உள்ளது.

3. கருப்பு உளுந்து- வெள்ளை உளுந்தை விட தோலுடன் கூடிய கருப்பு உளுந்தில் தான் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இதில் 25 கிராம் புரதம் உள்ளது.

4. பச்சைப் பயறு – இதில் 24 கி புரதம் உள்ளது.

5.  டூனா மீன் என்று அழைக்கப்படும் சூரை மீனில் 23 கிராம் புரதம் உள்ளது.

6. கோழியின் நெஞ்சு பகுதி- கோழியின் மற்ற பாகங்களை விட நெஞ்சு பகுதியில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. இதில் 21 கிராம் புரோட்டின் உள்ளது.

7. பன்னீர் – பால் பொருட்களில் ஒன்றான பன்னீரில் 14கிராம் புரோட்டின் உள்ளது.

8.  சோயாபீன்ஸில் 13 கிராம் புரதம் உள்ளது.

9. முட்டை வெள்ளை கருவில் 13 கிராம் புரதம் உள்ளது.

10.  தயிரில் 10 கிராம் புரதம் உள்ளது.

 

 

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! தொலைபேசி வழி தகவலால் அனுகூலம் உண்டாகும் நாள்!
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிகாலையிலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள்!