ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!! 

0
213

ரஜினிகாந்துடன் இதுவரை ஒரு படம் கூட நடிக்காத டாப் நடிகைகள்!!

தமிழ் திரையுலகிற்குள் 1975 ஆம் ஆண்டு நுழைந்த ரஜினிகாந்த அவர்கள் 1978 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்றார்.அன்றிலிருந்து தமிழ் திரையுலகை தன் ரசிகர்களின் பலத்தால் ஆட்டி படைத்தது வரும் ரஜினி அவர்களுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்ற கனவு எல்லா நடிகைகளுக்கும் இருந்து வருகிறது.

ஆனால் அவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கனவு நிஜமாகும் வாய்ப்பு கிடைக்கிறது.பெரும் பாலானோருக்கு அது கனவாகவே முடிந்து விடுகிறது.இப்படி தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க முடியாமல் போன 10 நடிகைகளின் விவரம் இதோ.

1.சுகன்யா

கடந்த 1991ஆண்டு வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார். 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தமிழில் கமல்,விஜயகாந்த்,சத்யராஜ்,பிரபு,கார்த்திக் என 90களின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள சுகன்யா இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2.கிரண் ராதோட்

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.தமிழில் விக்ரம்,கமல்,பிரசாந்த்,அஜித் உள்ளிட்ட டாப்

ஹீரோக்களுடன் நடித்துள்ள கிரண் ராதோட் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3.அசின்

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி” திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் உள்ளம் கேட்குமே,கஜினி,மஜா என பல படங்களில் நடித்து தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.தமிழில் விக்ரம் ,கமல் ,அஜித் ,விஜய், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள அசின் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4.தேவயானி

இவரின் முதல் தமிழ் படம் தோட்டா சினுங்கி என்றாலும் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.இப்படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.இவர் தமிழ், பெங்காலி, மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் விஜய்,அஜித்,சரத்குமார்,விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள தேவயானி இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5.சினேகா

தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வரும் இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘என்னவளே’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழில் கமல், விஜய், சூர்யா, தனுஷ், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள சினேகா இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

6.ரஞ்சிதா

இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடி தென்றல்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர்.தமிழில் அர்ஜுன்,விஜயகாந்த்,சத்தியராஜ், கார்த்தி என 90களின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள ரஞ்சிதா இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7.லைலா

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘கள்ளழகர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம்,பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

தில்,தீனா போன்ற படங்கள் இவருக்கு பெயரை பெற்று தந்தது.தமிழில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள லைலா இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8.காஜல் அகர்வால்

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பழனி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தமிழில் பரத்,அர்ஜுன்,அஜித்,விஜய்,சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9.ஸ்ருதி ஹாசன்

தமிழ் திரைப்படத்துறையில் உலக நாயகன் என்று புகழப்படும் கமல் அவர்களின் மகளான ஸ்ருதி ஹாசன் அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம்

தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.தமிழ்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.தமிழில் விஜய்,அஜித்,சூர்யா,விஷால் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன் இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10.கௌசல்யா

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.தமிழில் விஜய்,முரளி,பிரசாந்த் என 90களின் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள கௌசல்யா இதுவரை ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!
Next articleஅய்யய்யோ.. அவரைப்போல் டான்ஸ் ஆடினா டப்பா கழண்டுடும்! யார் அந்த நடிகர்?