6 மாத குழந்தையின் சளி இருமலை ஒரே நாளில் குறைக்கும் டாப் உணவுகள்!!

0
370
Top foods to reduce cold cough in 6 months baby in one day!!
Top foods to reduce cold cough in 6 months baby in one day!!

6 மாத குழந்தையின் சளி இருமலை ஒரே நாளில் குறைக்கும் டாப் உணவுகள்!!

ஆறு மாதத்திற்கு மேலிருக்கும் குழந்தைகளுக்கு சளி இருமல் ஏற்பட்டால் குறிப்பிட்ட சில உணவுகளை கொடுக்கும் பொழுது அதனை எளிமையாக சரி செய்து விடலாம். முதலில் சளி இருமல் வந்து விட்டாலே குழந்தைகள் உணவை உட்கொள்வது மிகவும் கடினம்.அதனால் கட்டாயப்படுத்தி உணவு அளிப்பதை தவிர்ப்பது நல்லது.அவர்கள் உணவு எடுத்துக் கொள்ளும் வரை மட்டும் கொடுத்தால் போதுமானது.

கஞ்சி:
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் கொடுப்பதால் உடலில் அதிகளவு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.
அதுமட்டுமின்றி இவர்களை முழு நேரமும் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ளும்.

சூப்:
6 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு காய்கறி சூப் கொடுக்கலாம்.
இதுவே 8 மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இறைச்சி வகைகளை சார்ந்த சூப் கொடுக்கலாம்.
மிளகு,சீரகம்,பூண்டு,சின்ன வெங்காயம் இவை மட்டும் சேர்த்து காரம் குறைத்து கொடுக்கலாம்.

பார்லி கஞ்சி:
பார்லி தண்ணீரில் ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.எனவே 6 மாதம் கடந்த குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம்.

துளசி மற்றும் கற்பூரவள்ளி:
குழந்தைகளுக்கு தினந்தோறும் குடிக்கும் தண்ணீரில் இரண்டு துளசி மற்றும் கற்பூரவள்ளி இலை சேர்த்து கொடுத்து வர சளி மற்றும் இருமல் குணமாகும்.

கேரட்,பீட்ரூட்,சர்க்கரை வள்ளி கிழங்கு,போன்றவற்றையும் சளி இருக்கும் நேரத்தில்  கொடுக்கலாம்.
அதே போல பழ வகைகளில் ஆப்பிள்,கொய்யா பழம்,மாதுளை போன்றவற்றை கொடுக்கலாம்.

மேற்கொண்டு குழந்தைகளுக்கு பழங்கள் கொடுத்து சளி அதிகமாகுவது போல் தோன்றினால் அதனை தவிர்த்து விடலாம்.

Previous articleநாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்!
Next articleஉள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!